லண்டனில் பிண அறைகள் நிரம்பியது: பனி சறுக்கல் விளையாட்டு நிலையங்களுக்கு உடல்கள் அனுப்பப்படுகிறது !
லண்டனில் உள்ள அனைத்து பிண அறைகளும் நிரம்பி வழிவதால், பனி சறுக்கல் விளையாட்டு இடம்பெறும் தனியார் நிலையங்களுக்கு உடல்களை அனுப்ப சுகாதார சேவை நிலையம் சற்று முன் கட்டளை பிறப்பித்துள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. பனி சறுக்கல் விளையாட்டு மைதானங்களில், பாரிய பனிக் கட்டிகளை உருவாக்க வல்ல இயந்திரங்கள் உள்ளது. அதுபோக அந்த இடமே மிக மிக குளிராக இருக்கும். இதனால் அங்கே உடல்களை வைத்தால் பல மணி நேரம் உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதன் அடிப்படையில் லண்டனில் உள்ள பல பனி சறுக்கும் விளையாட்டு மைதானங்களை அரசு வாடகைக்கு எடுத்துள்ளது என்ற செய்தி சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இருந்து கொரோனா தொற்று மிக அதிகமாக காணப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏன் எனில் கொரோனா வேகமாக பரவும் கால கட்டமாக ஏப்பிரல் மாதத்தை, மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழர்களே மிக மிக ஜாக்கிரதை. வயதானவர்கள் வீட்டின் உள்ளே இருப்பது நல்லது. எந்த காரணத்திற்காகவும் வெளியே செல்லவேண்டாம்.
No comments: