சுவிஸ்லாந்தில் பிறந்த தினத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஈழத்து இளம் மருத்துவர்; தாயின் நெகிழ்ச்சி காணொளி!
எனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குமுதா அரியகுனராஜ் எனும் ஈழத்து தாயொருவர் முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொண்ட குறித்த ஈழத்து தாய்க்கு 1993-ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் பிறந்த தனது குழந்தைக்கு ஒரு மாதம் இருக்கும்போது முதுகுத்தண்டு பிரட்ச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தபோது சுவிஸ்லாந்து வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள்தான் தனது குழந்தையை வளர்த்ததாக கூறும் குறித்த தாய், அப்போதே தன்பிள்ளையை ஒரு வைத்தியராக்க வேண்டுமென எண்ணியதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் குறித்த ஈழத்து பெண்ணின் மகள் இன்று ஒரு வைத்தியராக கொரோனா நோயாளிகளுக்கு தனது 27-வது பிறந்த தினத்தில் சிகிச்சையளித்துவருவதாகவும் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பெருமிதத்துடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி பதிவு தற்போது முகநூல் நண்பர்களால் பகிரப்பட்டு, தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்ற நிலையில், குறித்த ஈழத்து இளம் மருத்துவர் மென்மேலும் பல சேவைகளை திறம்பட செய்து ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென எமது இணையத்தளம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி – தினச்சுடர் இணையம்.
No comments: