கொரோனாவினால் துவண்ட இத்தாலியில் ரஷ்ய இராணுவம் களமிறங்கியது!
இத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் பொருட்டு ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், கோர்லாகோ(gorlago) நகரில் மருத்துவமனைகள், முதியோர் வசிக்கும் கட்டடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்ய இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா (ELENA GRENA), கடினமான காலங்களில் உதவுவதன் மதிப்பை உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
No comments: