சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !
சீனா மீது ராணுவத்தை மட்டும் தான் ஏவவில்லை. மற்றும் படி முழு அளவிலான போர் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால் ரம் ஆரம்பித்துள்ளார். முதலாவதாக உலக சுகாதார மையத்தை(WHO), சீன சுகாதார மையம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று சற்று முன்னர் அவர் தெரிவித்த கருத்து. உலகை உலுப்பியுள்ளது. காரணம் என்னவென்றால், முதன் முதலாக வுகான் மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட சமயம். சீனா மிக மிக பிழையான தரவுகளை உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வந்தது. 40,000 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கூட, வெறும் 5,000 பேர் தான் பாதிக்கப்பட்டதாக தகவலை வழங்கி வந்தது.
இதனை எந்த ஒரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் உலக சுகாதார மையம், அப்படியே வெளிட்டு வந்தது. கொரோனாவின் ஆபத்து பற்றி உலக சுகாதார மையம் சீனாவின் சொல்லை கேட்டு குறைத்து மதிப்பிட்டது. இதன் காரணத்தால் தான் சீனர்கள் அமெரிக்க செல்ல அமெரிக்கா தடை விதிக்கவில்லை. பின்னர் அங்கே சென்ற சீனர்கள் கொரோனாவை, அமெரிக்காவுக்கு பரப்பி விட்டார்கள். இவ்வாறு சீனா ஆரம்பத்தில் இருந்தே உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கி வந்தது. இதற்கு சில அமைப்புகள் உதவி புரிந்துள்ளது. குறித்த அமைப்பில் முன்னணியில் நிற்ப்பது உலக சுகாதார மையம். இதற்கு அமெரிக்கா ஆண்டு தோறும் பல மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாக வழங்கி வருகிறது.
இந்த நிதியை தற்போது தடைசெய்ய அமெரிக்க அதிபர், தனது சிறப்பு அதிகாரங்களை பாவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ள உலக சுகாதார மையம், தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி நிற்கிறது.
இது போக சர்வதேச நீதிமன்றத்தில் சீனா மீது வழக்கு தொடுக்க முடியுமா என்று பிரித்தானிய சட்ட வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். உலகில் உள்ள பல நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். கொரோனா என்பது ஒரு கொடிய தொற்று நோய் என்று ஒரு சொல்லை சீனா ஆரம்பத்தில் சொல்லி இருந்தால், இத்தனை அழிவும் ஏற்பட்டிருக்காது. எல்லா நாடுகளும் தமது கதவை மூடி மக்களை பாதுகாத்திருக்கும் அல்லவா.
No comments: