Header Ads

Header Ads

இந்தோனிசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் உள்ள போக்குவரத்து முனையத்தில் தற்கொலை படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் என்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனிசியா தலைநகர் Jakarta பகுதியில் உள்ள Kampung Melayu மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அருகே உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் பலத்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் ஒரு பொலிசார் உட்பட பலர் காயமடைந்திருப்பதாகவும், இரண்டு பேர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அதில் ஒருவர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய தற்கொலை படையைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும் இத்தாக்குதலை இரண்டு பேர் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் ஒரு குண்டு வெடித்ததாகவும், அடுத்த பத்து நிமிடங்களில் அடுத்த ஒரு குண்டு என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று நடந்த இச்சம்பவத்தால், பொலிசார் அங்கு விரைந்துள்ளதுடன், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனிசியாவும் அடங்கும். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்தோனிசியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 202 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.