பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பிரித்தானியா வாழ் தமிழர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
இதில் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை நேரடியாக அனுபவித்த, மற்றும் தமிழ் இனத்திற்காக போராடிய சசிகரன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்துள்ளார்.
பிரித்தானிய தேசியக்கொடியை தமிழர் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் தர்சன் ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியை தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய அருகுமாரன் ஏற்றி வைத்துள்ளார்.
பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டதுடன், தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: