மஞ்செஸ்டர் தாக்குதல் தனிநபரினால் முன்னெடுக்கப்பட்டதல்ல
மஞ்செஸ்டர் தாக்குதலானது தனிநபர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலல்ல என பிாித்தானிய உள்துறை செயலாளர் ஆம்பர் ரூத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்களை அமெரிக்க உளவுத்துறை கசியவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற லிபிய வம்சாவளியான சல்மான் அபேடி என்ற நபரினால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 64 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் குண்டுதாரியும் உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்று மூவரை கைது செய்துள்ள அதேவேளை, அபேடியின் சகோதரர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: