வவுனியாவில் கடும் காற்றுடன் மழை
வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் காற்று வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டடம் ஒன்றின் பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், குருமன்காடு பகுதியில் பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் சில மணிநேரம் மன்னார் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், வவுனியா நகரப்பகுதியில் பல பகுதிகளிலும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: