Header Ads

Header Ads

ரியல் ஹீரோ! பிரித்தானியா தீவிரவாத தாக்குதலில் நெகிழ்ச்சி சம்பவம்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவர்களை காப்பாற்றி முதலுதவி அளித்த ஆதரவற்ற நபருக்கு தங்க வீடு ஒன்றை அளித்து மக்கள் உதவியுள்ளனர்.
மான்செஸ்டர் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த அரங்கத்தின் அருகே தூக்கத்தில் இருந்தவர் Stephen Jones.
ஆதரவற்ற இவர் தங்க வீடு இன்றி சாலை ஓரத்தில் படுத்துறங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
சம்பவத்தின் போது பயங்கர சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்த Stephen Jones, அலறல் சத்தம் கேட்ட பகுதி நோக்கி விரைந்துள்ளார்.
அங்கே குற்றுயிராக உயிருக்கு போராடிய சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை கண்ட இவர், உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
வெடிகுண்டில் இருந்து சிதறிய ஆணிகள் துளைத்த நிலையில் சிறுவர்கள் அலறிக்கொண்டு விரைவதைக் கண்ட Stephen Jones, உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அந்த சிறுவர்களின் முகத்திலும் உடம்பிலும் துளைத்திருந்த ஆணிகளை ஒவ்வொன்றாக அகற்றியுள்ளார்.
Stephen Jones செய்த இச்செயல் சமூகவலைதளங்கள் வாயிலாக வெஸ்ட் ஹாம் இணைத் தலைவர் David Sullivan பார்வைக்கு எட்டியுள்ளது.
இதனையடுத்து Stephen Jones இருக்கும் இடத்தை கண்டறிந்த அவர், உடனடியாக மான்செஸ்டர் பகுதியிலேயே வீடு ஒன்றை 6 மாத காலம் தங்கும் வகையில் ஏற்பாடு செய்து அளித்துள்ளனர்.
மட்டுமின்றி அவரது அன்றாட தேவைகளுக்காக நிதி ஒன்றையும் பொதுமக்களிடம் இருந்து திரட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை Stephen Jones செய்கையை பாராட்டி 16,600 பவுண்ட் வரையில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டுள்ளதாக வெஸ்ட் ஹாம் இணைத் தலைவர் David Sullivan தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.