முல்லைத்தீவு கச்சேரி கெப் விபத்து; ஒருவர் மரணம்
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சிரம்பையடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு நோக்கிச் பயணித்துக்கு கொண்டிருந்த முல்லைத்தீவு கச்சேரிக்குச் சொந்தமான கெப் வாகனமும் புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற லொறியும் மோதியதில் கெப் வாகனத்தின் சாரதியான ராஜா ராசன் (40) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அதில் பயணித்த முல்லைத்தீவு மாவட்ட தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரி உட்பட மூவருர் மற்றும் லொறியின் சாரதி, நடத்துனரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை விபத்தில் காயமடைந்த, முல்லைத்தீவு மாவட்ட தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் மரணமடைந்த சாரதியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலயில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: