உன் உடலை சாப்பிட்டுவிடுவேன்: நிறைமாத கர்ப்பிணியை 40 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்
பிரித்தானியாவில் 7 மாத கர்ப்பிணி மனைவியை 40முறை கத்தரியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடமேற்கு லண்டனின் நச்டன் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஐயான் கேம்பயானு. இவருடைய மனைவி 8 வயதான ஆண்ட்ரா ஹில்டான் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம், ஐயான் தன்னுடைய மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கத்தரியை கொண்டு 40 முறை சரமாரியாக ஆண்ட்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார். அதோடு அல்லாமல் வயிற்றில் இருந்த பிறக்காத குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தால் படுகாயங்களுடன் 20 நிமிடங்களுக்கு மேல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனைவியை வேடிக்கை பார்த்துவிட்டு, இறந்த பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் விரைந்து வந்த பொலிஸார், கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தன்னுடைய மனைவி 3-வது குழந்தை வேண்டாம் என கூறியதால் தான் கொன்றேன் என கூறியுள்ளான்.
ஆனால் சம்பவம் நடைபெறுவதற்கு முன் தினம் இரவு, உன்னை கொலை செய்து உடல்பாகத்தை சாப்பிட்டுவிடுவேன் என ஆண்ட்ராவை மிரட்டியதாக அவருடைய சகோதரி பொலிசாரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.
No comments: