விஸ்வாசம் படம் பார்த்த ஷாலினி அஜித் சொன்ன ஒரே விஷயம்
இந்த பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துவிட்டது அஜித்தின் விஸ்வாசம்.
அவர்கள் என்ன நினைத்து படம் எடுத்தார்களோ அது நிறைவேறிவிட்டது, இளைஞர்களை தாண்டி குடும்பங்கள் ரசிக்கிறார்கள், திரையரங்கம் வந்து பார்க்கிறார்கள்.
பட வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியில் இருக்கும் சிவா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஷாலினி அவர்கள் என்ன கூறினார்கள் படம் குறித்து என்று கேட்டதற்கு அவர், ஷாலினி அவர்களுக்கு படம் பிடித்திருந்தது, நல்ல மெசேஜ் இருக்கு. அஜித் அவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார் என்று அவர் கூறினாராம்.
ஷாலினி அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் சிவா.
No comments: