0 ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றும் அரசுக்கு கால அவகாசம் வேண்டாம்

அவர்கள் எல்லோரும் தேசப்பற்று உள்ளவர்களாக நாட்டில் வேடமிட்டு நடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இருப்பினும் மக்கள் சுட்டிக்காட்டும் அவர்களிடம் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த எந்தவொரு விசாரணையினையும் அரசாங்கம் இதுவரை மேற்கொண்டதாக தகவல் இல்லை.
தமிழ் மக்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதைப்போல் வருடாந்தம் ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி ஐ. நா மனித உரிமைப் பேரவையில் தனக்கான கால அவகாசத்தைக் கோரி அரசாங்கம் அவர்களையும் ஏமாற்றுகின்றது இதன் மூலம், பிரச்சினையினை நீர்த்துப்போகச் செய்வதற்கான கைங்கரியத்திலேயே முழுமையாக ஈடுபடுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும்.
ஐக்கிய நாட்டு மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதில் கூறப்பட சில முக்கியமான விடயங்களை அரசாங்கம் அமுல் படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்ற விடயங்களில் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தின்பின்னர் மனித உரிமைப் பேரவையில் இலற்கை தொடர்பாக சர்வதேசம் கடைப்பிடித்த மெததெனப்போக்கு இன்றுவரை தொடர்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கமோ அதுதொடர்பில் உரிய கரிசனை கொள்ளவில்லை என்பதையே அண்மைய செயற்பாடுகள் காட்டுகின்றது.
இறுதிப் போரின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை அரசாங்கம் இதுவரை ஆரம்பிக்காத நிலை தொடர்கின்ற நிலையில் தமிழ் மக்களின் போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
யுத்தத்தினை வழிநடத்திச் சென்ற முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் இராணுவத்தளபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலர், படைகளின் கட்டளைத் தளபதிகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் என அனைவருமே நாட்டில் இருந்தும் அவர்களிடம் இதுவரை எந்தவொரு விசாரணையினையும் முன்னெடுப்பதற்கான எந்தவொரு செயல்முறையிலுமே அரசாங்கம் இதுவரை ஈடுபடவில்லை.
இருப்பினும் படையினர் யுத்தகுற்றத்தை புரியவில்லை அவர்கள் அவ்வாறு இழைத்திருந்தாலும் அவர்களை பாதுகாப்பதிலிருந்து தவறமாட்டேன்
என்று வெளிப்படையாகவே தமிழர்களின் வாக்குகளை பெற்ற தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவும் மேடைகளில் நாட்டு மக்களுக்கு கூறிவருகின்றார்.
இந்நிலையில் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கலாம் என எதிர்பார்ப்பது தமிழர்களை மேலும் படுகுழியில் தள்ளிவிடுவதாகவே அமையும். எனவே தமிழ் அரசியல்வாதிகளும் அரசுக்கு இவ்விடயத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்குவதை உடன் நிறுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர்களின் துயரை போக்க வேண்டும் என்பதே இன்று நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
No comments: