7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே 7 பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனிமையில் தவித்து வரும் மூதாட்டி குறித்து செய்தி வெளியானதை அடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
மாத்தூர் முண்டக்காலைச் சேர்ந்த கோலம்மாள் என்ற அந்த மூதாட்டியை தனிமையில் விட்டுவிட்டு அவருடைய 7 பிள்ளைகளும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
நோயுற்று படுக்கையில் கிடக்கும் மூதாட்டியிடம் இருந்த சேமிப்புப் பணத்தையும் அவரது மகன்களில் ஒருவர் வந்து பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உணவோ, உடமைகளோ இன்றி தவித்து வந்துள்ளார்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர்.
கன்சியூமர் பியூரோ ஆப் இந்தியா
(Consumer bureau of India) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூதாட்டிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்
என்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அவரது பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
No comments: