இலங்கையில் 17 பேர் திடீர் கைது
சிவனொளிபாத மலைக்கு யாத்திரியைக்காக சென்ற 17 பேர் நேற்று இரவு (16) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யபட்டவர்களிடம் இருந்து கேரள கஞ்சா, ஜஸ் மெதன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள், கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்திதில் கோவில்களை உடைத்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களால் கொள்ளையிடப்பட்ட ஆலய பொருட்களும், கல்குடா காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: