பெண்ணுடன் கள்ளக்காதல் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற கும்பல்
ஆன்லைன் பொருட்கள் கொடுக்க சென்றபோது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி அவரது வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க சென்றதால் ஹரிக்கும், அந்த பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த பெண்ணின் கணவர், மனைவியையும், ஹரியையும் கண்டித்தார்.
இந்த நிலையில் ஹரியை மர்ம கும்பல் ஆட்டோவில் செங்கல்பட்டு அருகே கடத்தி சென்றனர். பழவேலி அருகே சென்றபோது ஹரியை அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
பலத்த காயம் அடைந்த ஹரி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.
மேலும் ஒருவரை கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலத்த காயம் அடைந்த ஹரி சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments: