மகிந்தவின் கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பசில் ராஜபக்ஷவிற்கும் மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சித் தலைவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அத்தோடு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் என்றும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
குறித்த கருத்தானது தற்போது மொட்டு கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அக்கட்சிக்குள் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார இதனை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தனித்த ஒரு கட்சி அல்ல என்றும் பல்வேறு கட்சிகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பசில் ராஜபக்ஷவின் கருத்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரானது என குறிப்பிட்டார்.
No comments: