தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேரம் பேசிய மகிந்த
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தமிழில் வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பானவர்களை மஹிந்த சந்தித்துக்கொண்டார்.
இதன்போது சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தனக்கு சாதகமாக செயற்படுமாறு சிலருக்கு பணம் வழங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.
No comments: