கொரோனா வைரஸ் பரவல் குறித்து 2019 செப்டம்பரிலேயே எச்சரிக்கப்பட்டது !
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் பிரிட்டனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால் பிரிட்டனில் இதுவரை 19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக சுகாதார நிறுவனம் - உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கும் நோய் பரவல் குறித்து எச்சரிக்கப்பட்டது என்று பிபிசி ரேடியோ-4க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
''இப்போது நாம் எதிர்கொண்டுள்ளது முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு,'' என்று அவர் கூறியுள்ளார்.
இதை எதிர்கொள்ள உலகின் தயார் நிலை மற்றும் தற்போதைய சூழல் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
BBC TAMIL
No comments: