தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களோடு தொடர்பில் இருந்த பெண் மருத்துவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த ஈரோடு மற்றும் கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகள் மூடப்பட்டன.
இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பத்து மாத ஆண் குழந்தை, தாய் மற்றும் வீட்டில் வேலைசெய்யும் பெண் உட்பட ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லிக்கு சென்று வந்த ஈரோட்டைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: