சுத்துமாத்து விடும் பிரிட்டன் அரசு: தொற்று 2619 ஆக உயர்வு: வேறு செய்திகளை சொல்லி டைவேட் செய்கிறார்கள்
பொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா, சுகாதார அமைச்சருக்கு கொரோனா, அத்தோடு பொறிஸ் ஜோன்சனின் ஆலோசகருக்கு கொரோனா என்று மாறி மாறி , Breaking News செய்திகளை வெளியிடும் பிரித்தானிய அரசு. கொரோனா தொற்று தொடர்பான செய்திகளை சிறியதாக மாற்ற முயற்ச்சி செய்து வருகிறது. அதாவது ஒரு சிறிய கொடு இருக்கிறது என்றால். அதனை அழிக்க வேண்டும் என்றால். அதனை அழிக்காமல். பெரிய கோடு ஒன்றை அருகே கீறினால் போதும். சிறிய கோடு மறைந்து விடும். இந்த தத்துவத்திற்கு அமைவாக. பிரித்தானிய அரசு, பெரும் புள்ளிகளுக்கு கொரோனா என்ற செய்தியை முன் நிலைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.
ஆனால் பிரித்தானியாவில் கொரோனா தொற்று முன் எப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,619 பேருக்கு தொற்று இருப்பது மேலதிகமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரித்தானியாவில் கண்டு பிடிக்கப்பட்ட நபர்களின் தொகை 22,000 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் உத்தியோக பூர்வமற்ற தகவல்களின் படி, சுமார் 6 லட்சத்தி 60,000 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் மிக அவதானமாக இருப்பது நல்லது.
No comments: