ஒரு நாளைக்கு 1,000 பேர் படி சாவு விழப் போகிறது: சிவப்பு மணி லண்டனுக்கு
ஒரு நாளைக்கு 1,000 பேர் படி சாவு விழப்போகிறது என்று, பிரித்தானிய சுகாதார அமைச்சர் மட் ஹனக் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார். சற்று முன்னர் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கும் எக்ஸெல் மண்டபத்தில் 4,000 படுக்கை கொண்ட மிகப் பெரிய வைத்தியசாலையை, அவர் பார்வையிட்டார். அதன் போது பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Matt Hancock warns there could be 1,000 coronavirus deaths a DAY by Easter Sunday and admits UK still doesn’t have ANY usable antibody kits that could start getting Britain back to normal
இன்று சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையின் படி, இன்று மட்டும் சுமார் 4,500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு வரலாறு காணாத 684 பேர் இன்று கொரோனாவால் இறந்துள்ளார்கள். இதனால் பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3605 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நாம் ஒரு விடையத்தை கவனிக்க வேண்டும். சீனாவில் 90,000 ஆயிரம் பேருக்கு பரவியது கொரோனா. அதில் 3332 பேர் தான் இறந்தார்கள். ஆனால் இங்கே 30,000 ஆயிரம் பேருக்கு தான் கொரோனா பரவியுள்ளது. ஆனால் 3,500 பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். இறப்பு எண்ணிக்கை 10% சதவிகிதத்தை தாண்டி விட்டது.
No comments: