68 ஆண்டுகால ஆட்சி, நான்காவது முறையாக மக்களிடம் பிரிட்டன் ராணி எலிசபெத் உரையாற்ற உள்ளார்
பிரிட்டன் ராணி எலிசபெத் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
தனது அரச பொறுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ராணி, தற்போது வின்ஸ்டோரில் உள்ள அரண்மனையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
68 ஆண்டுகால ஆட்சிக் பொறுப்பில், நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் அவர் உரையாற்ற உள்ளார்.
2002ஆம் ஆண்டு அவரது தாயின் மரணம், 1997ல் வேல்ஸ் இளவரசி டயானா மற்றும் 1991ல் முதல் வளைகுடா போர் ஆகிய மூன்று நிகழ்வுகளின் போது மட்டுமே இரண்டாம் எலிசபெத் ராணி இதுவரை உரையாற்றி உள்ளார்.
No comments: