பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு தொடர்ந்து இருக்கும் கொரோனா
தனக்கு இன்னும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், “நான் நன்றாக உணர்கிறேன். ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் எனக்கு வைரஸ் தொற்றுக்கான சில அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் அறிவுரைப்படி நான் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்” என்று அவர் தெரிவித்தார்
No comments: