Header Ads

Header Ads

சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 – 2021

சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.


மேஷ ராசியில் சூரியன் வர உங்களின் 9ம் வீடான பாக்கிய ஸ்தானமான தனுசுவில் சார்வரி ஆண்டு பிறக்கிறது.ஜூலை முதல் நவம்பர் வரையிலான குருவின் பார்வை பலனால் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு கிடைக்கப்பெறுவீர்கள். லாபாதிபதி பெயர்ச்சி 10ம் இடத்திற்கு செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டிய அவசியம். உங்களுக்கு கர்ம சனி நடக்கிறது. அதனால் பெரியளவில் சனியின் தாக்கம் இருக்காது என்பதால் கவலை இல்லை.இதுவரை வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். பெரியளவில் லாபம் இல்லாவிட்டாலும், செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீர்கள். 9ம் இடத்தில் ஆண்டு பிறப்பதால் உங்களுக்கு பாக்கியங்கள் சேரும். திருமணம், குழந்தை பாக்கியங்கள் நடக்கப்பெறும். தந்தை வகையில் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், ஆலோசனை கிடைக்கும்.தொழில். வியாபாரத்தில் எதிரிகளை சமாளிக்க புதிய திட்டமிடல்களை செயல்படுத்துவீர்கள். இதன் வகையில் சில செலவுகள், விரயங்கள் ஏற்படலாம். இருப்பினும் குருவின் பார்வையால் அது சுப விரயங்களாக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம், பயணம், கடன் வாங்குவதில் கவனம் தேவை. கடன் வாங்குவதும், கொடுப்பது பிரச்னை தரக் கூடும்.


உங்களுக்கு அதிசார குரு பெயர்ச்சி, அதைத் தொடர்ந்து நவம்பரில் நடக்கும் குரு பெயர்ச்சியின் காரணமாக குருவின் 5ம் பார்வை நேரடியாக உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது. அதனால் எந்த பிரச்னையையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதோடு அஷ்டம சனி முடிவதால் உங்களுக்கு அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் சற்று அலைச்சலுடன் காணப்பட்டாலும், வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள். உங்களை தேடி வரும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், சரியான நேரத்தில் முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். சம்பளம், உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அவற்றை சமாளிக்க குழந்தைகளுடன் விளையாடுதல், கோயிலுக்கு சென்று தெய்வங்களை உள்ளம் உருக வேண்ட மனம் அமைதியாகும். குரு சனியின் ஆட்சி பெற்ற வீடான மகரத்திற்கு செல்லும் போது நீச்ச பங்க ராஜயோகம் அடைவதோடு உங்கள் ராசியை 5ம் பார்வையாக பார்ப்பதால் பல நன்மைகள் நடக்கும்.குடும்பத்தில் அமைதியும், கருத்து வேறுபாடு கலந்து இருந்தாலும், மகிழ்ச்சி தவழும்.ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு உங்கள் ராசிக்கு வருவதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர நன்மை உண்டாகும்.
சார்வரி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சற்று சவாலானதாக தான் இருக்கும். அஷ்டம சனி நடப்பதோடு, குருவும் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதோடு, குடும்பத்தில் சிறு பிரச்னைகளும், துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.தொழில், வியாபாரம் சிறக்கும். நினைத்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் திறமை பாராட்டைப் பெற்று தரும். பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்முடிந்த வரையில் செயல்களில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் வாக்கு கொடுப்பது, ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திடுவது வேண்டாம். உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. வீண் பேச்சு மற்றவர்களின் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். முடிந்த வரை செலவுகளை குறைத்து சேமிப்பதால் உங்களின் இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கும்.
கடக ராசிக்கு சார்வரி ஆண்டு மிக சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும். குருவின் 7ம் சிறப்பு பார்வை விழுவதால் உங்களுகளின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டாவதோடு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணி இடம் மாற்றம் உள்ளிட்ட இடமாற்றங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.இதுவரை வேலையில் இருந்த சுணக்கம் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வீடு மனை வாங்குதல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல் என மாற்றங்கள் நடக்கும்.கடக ராசி சார்வரி புத்தாண்டு பலன்கள் 2020 – மிக அருமையான காலத்தை அனுபவிக்க தயாராகுங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மற்றபடி அனைத்திலும் வெற்றியைத் தரக் கூடியதாக இந்தாண்டு அமையும். உங்கள் ராசி பற்றி கவலையே இல்லை.
பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆண்டு பிறப்பதால் பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பயணங்கள் செய்ய வாய்ப்புக்கள் அமையும். இதுவரை இல்லாத சுறுசுறுப்பை உணர்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.வீடு, மனை வாங்கும் பாக்கியம் உண்டாகும். முன்னோர்களின் ஆசியும், மகான்களின் ஆசி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதோடு, உத்தியோக மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.சிம்ம ராசி சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் : பல அற்புதங்கள் நடக்கும் ஆண்டு கடன் கொடுக்க பலர் முன்வருவர். ஆனால் தகுதி அறிந்து வாங்குவது சிக்கலை குறைக்கும். தன வரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடன் பெரிய லாபம் வராவிட்டாலும், மன திருப்தி தரும். பயணங்கள் செல்வதில் கவனம் தேவை.
சுக ஸ்தானத்தில் கன்னி ராசிக்கு இந்த சார்வரி புத்தாண்டு பிறப்பதால் பல சுகபோகங்கள் ஏற்படும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படுவதோடு, புதிய வீட்டு உபயோக பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும்.இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை நீங்கி அனுகூலம் உண்டாகும். தேக்க நிலை மாறும். குருவின் சிறப்பு வாய்ந்த 9ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் இந்த ஆண்டு மிக உயர்வானதாக இருக்கும்.அர்தாஷ்டம சனி என்பதால் பேச்சு செயலில் கவனமும், நிதானமும் தேவை.உங்கள் திறமை பளிச்சிடும் என்பதால் எதிர்பார்த்த உத்தியோக, ஊதிய உயர்வு கிடைக்கும்.
கன்னி சார்வரி புத்தாண்டு பலன்கள் – அதிர்ஷ்டத்தை அள்ள தயாராகுங்கள் பண வரவு ஒரு புறம் இருந்தாலும், செலவும் அதிகரிக்க வரக் கூடும் என்பதால் கவனம் தேவை.
பல சவால்களை சந்திக்க இருக்கும் நீங்கள் அதை தைரியம், துணிச்சலுடன் சமாளித்து முன்னேறுவீர்கள். சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது.வீடு, வாகன பாக்கியம் உண்டு. தொழில், வியாபாரத்தில் பல புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம், பாராட்டு கிடைக்கும்.எந்த செயலிலும், முடிவெடுப்பதிலும் கவனமாக இருப்பது அவசியம். சிக்கல்கள் இருந்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றியை பெற்றுத் தரும்.பெண்களுக்கு பெரியளவு சாதகமில்லாமல் இருக்கும். குடும்பத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடக்கும்.
மிக சிறப்பான ஆண்டாக விருச்சிக ராசிக்கு அமைய உள்ளது. ஏழரைச் சனி முடிந்து மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் 15.05.2020 முதல் 29.9.2020 வரை வக்கிர நிலை அடை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.இந்த வக்ர சனி காலத்தில் விருச்சிக ராசியினர் பேச்சு,செயலில் மிக கவனமாக இருப்பதோடு, கோபத்தை குறைப்பது மிக அவசியம். பெரியோர்கள், மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.பணிச்சுமை இருந்தாலும், அதை உற்சாகமாக செய்து முடிக்கும் மன நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நலம். அதிர்ஷ்டங்கள் ஏற்படக் கூடிய அருமையான காலம்.நீங்கள் கண்ட கனவுகள் நிறைவேறக் கூடிய, நிறைவேற்றக் கூடிய காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் ராசியில் இந்தாண்டு பிறப்பது விசேஷமானது. ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் இந்த சமயம், குருவும் உங்கள் ராசியை விட்டு மகரத்திற்கு செல்வதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வருடம் இது.பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் யாரையும் நம்பி உங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். எந்த எதிர்மறை சிந்தனைகளிலும் ஈடுபடாமல் உங்கள் வேலையை விடாமுயற்சியோடு செய்து முடிக்க முயலுங்கள்.வீண் பேச்சு, கோபத்தை கைவிட காரியங்கள், உறவுகள் கைகூடும். உங்கள் துணை உங்களுக்கு ஆறுதலை தருபவராக இருப்பார்.தொழில். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தல் லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கி நட்பு அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் உண்டாகும் அற்புத ஆண்டாக இருக்கும்.
ஜென்ம சனி நடந்தாலும், நல்ல பலன்களைப் பெறப் போகும் அற்புத ராசியாக மகர ராசி இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.இதுவரை தொழிலில் இருந்த தடைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை உண்டாகும். பண வரவு அதிகரிக்கும் அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம், புத்திர பாக்கியம் உள்ளிட்ட சுப நிகழ்வு நடக்கும். கல்வியில் மேன்மை அடையக் கூடிய ஆண்டு. வீண் பேச்சுக்களையும்,அலைச்சல்களையும் தவிர்க்க நன்மை உண்டாகும்.
ஜென்ம சனி, விரய குருவாக இருப்பதால் கும்ப ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு. இருப்பினும் உங்களுக்கு பல அதிர்ஷ்டங்கள் அடிக்க வாய்ப்புள்ளதால் பிரச்னைகளை சாதகமாக வாய்ப்புக்கள் பிறக்கும்.தன வரவு அதிகரிப்பதால், பற்றாக்குறை நீங்கும். கடன் சுமை நீங்கும். உடல் நலம் மேம்படும் என்பதால் சேமிப்பு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கான பரிகாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இந்தாண்டு பிறப்பதால், மிக சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது.குருவின் 3ம் பார்வை, லாப சனி என்ற நிலை இருப்பதால் மிக நல்ல பலன்களை பெறப்போகும் ராசியாக மீனம் உள்ளது. பல திடீர் திருப்பங்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.தொழில், வியாபாரம் நல்ல முன்னேற்றத்தைக் காணும். புதிய வேலை கிடைத்தல், உத்தியோக உயர்வு ஏற்படக் கூடிய அற்புத ஆண்டு.மதிப்பு மரியாதை தேடி வரும். புதிய வாய்ப்புக்கள் தேடி வருவதோடு, உங்களின் முதலீடு லாபத்தை தரும்.சுப காரியங்கள் கைகூடும். பல சுப செலவுகள் செய்ய வேண்டிய நல்ல காலம் பிறக்கிறது.
உங்க நண்பர்களுக்கு அனுப்ப ஷியார் பண்ணுங்க

எல்லா ராசிகளுக்கான ​பரிகாரம்:
மேஷம்
அடிக்கடி முருகன் கோயிலுக்கு சென்று மனம் குளிர முருகனை தரிசனம் செய்வது உகந்தது. முடிந்தால் திருச்செந்தூர் அல்லது ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்கு சென்று வருவது சிறந்தது.
ரிஷபம்
ராகுவுக்கு அதிபதியான மகாலட்சுமியை வணங்குவது நல்லது. அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட அனைத்து தடங்களும் பொடிபடும்.
பெருமாள் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.
மிதுனம்
துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு மன தைரியம் கொடுத்து இன்னலிலிருந்து காக்கும்.
கடகம்
முடிந்த போதெல்லாம் சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவசியம். பிரதோஷ நிகழ்வில் கலந்து கொள்ள எண்ணங்கள் நிறைவேறும். பெளர்ணமி பூஜை நிறைவை தரும்.
சிம்மம்
தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மேன்மையை தரும்.
சிவன் கோவிலுக்கு சென்று வர நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
கன்னி
பெருமாள் வழிபாடு அனைத்திலும் முன்னேற்றத்தை தரும்.
துலாம்
வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எல்லா தடைகளும் நீங்கும்.
விருச்சிகம்
காலபைரவர் வழிபாடு, முருகன் வழிபாடு எல்லா செயலிலும் வெற்றியைத் தரும்.
தனுசு
சிவன் கோயில் வழிபாடும், நவகிரகங்களில் குரு பகவான் வழிபாடு செய்து வர அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை கிடைக்கும்.
சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் – சாம்பிராணி வகைகளின் பலன்கள்
மகரம்
கணபதி, ஆஞ்சநேயர் வழிபாடு வல்வினைகளைத் தீர்த்து நன்மை உண்டாக்கும்.
கும்பம்
ஐயப்பன், அனுமன் வழிபாடு செய்ய எதிலும் ஜெயம் உண்டாகும்.
மீனம்
மீனாட்சி அம்மன் வழிபாடு செய்வதும், குரு வழிபாடும் உங்களை மேலும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

No comments:

Powered by Blogger.