கொரோனா பாதிப்பு: ‘உச்ச நிலையை நெருங்குகிறது அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் பாதிப்பு ‘உச்ச நிலையை நெருங்கி வருவதாக’ அந்த நாட்டின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்டு, அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நாடு முழுவதும் ‘நிலைப்பட்டு வருவதாக’ கூறியுள்ளார்.
உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்றிலும், உயிரிழப்பிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதாவது, அமெரிக்காவில் 5,57,663 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது படிப்படியாக மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
No comments: