லண்டனில் 2022 வரை ஆட்கள் கூடும் இடங்களில் தொடர்ந்தும் கட்டுப்பாடு இருக்கும்
இன்னும் இரண்டு வருடங்களுக்கு, அதாவது 2022 வரை ஆட்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டாலும். இதன் தாக்கம் மீண்டும் வரலாம் என்ற அச்சம் காணப்படுகிறது. காரணம் என்னவென்றால், எல்லா உலக நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்த பின்னர் கூட. ஏதாவது ஒரு 3ம் உலக நாடுகளில் இது மீண்டும் பரவ ஆரம்பித்து, அது ஐரோப்பிய நாடுகளை அது அதாக்க கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அது போக வேறு வைரஸ் பரவல் கூட இப்படி வரலாம்.
அல்லது கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் ஒன்று பரவலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணத்தால் பிரித்தானியாவில் தொடர்ந்தும் ஆளுக்கு ஆள் 6 அடி தொடக்கம் 10 அடி தள்ளி நிற்ப்பது. மக்கள் கூடும் இடங்களில் போதிய இடைவெளியை பாதுகாப்பது என்பது போன்ற விடையங்கள் இன்னும் 2 வருடங்கள் வரை நீடிக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
No comments: