மோசமான நிலையில் அமெரிக்கா: அதிகபட்ச உயிரிழப்பு பதிவானது!
கொரோனா வைரஸின் தீவிர பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்காவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடள் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கடும் போக்கில் மனித இழப்புக்களை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் புதிய நோயாளர்கள் 26 ஆயிரத்து 945 பேர் நேற்று மட்டும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 6 இலட்சத்து 13 ஆயிரத்து 886 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உலக அளவில் கொரோனாவால் பெரும் மனித இழப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 26 ஆயிரத்து 945 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் மரணித்துள்ளனர்.மேலும் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments: