Header Ads

Header Ads

WHOக்கு செல்லும் அனைத்து பணத்தையும் முடக்கினார் ரம்: அடி பணியுமா WHO அமைப்பு

உலக சுகாதார அமைப்பான WHO க்கு செல்லும் அனைத்து நிதிகளையும் கால வரையறையின்றி நிறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் ரம். அமெரிக்கா  உலக சுகாதார நிறுவனத்திற்கும் பெரும் தொகை நிதியை வருடம் தோறும் வழங்கி வருகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம், சீன அரசுக்கு சார்பான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. வுகான் மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளைகளில், சீன அரசு தெரிவித்த இழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே வெளியிட்டு வந்தமை, உலக சுகாதார அமைப்பு செய்த பெரும் பிழையாகும்.
தற்போது சீனர்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்கப்பட்டது, தவறான செயல் என்று உலக சுகாதார நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்ற அதிபர் டொனால் ரம் உடனே பத்திரிகையாளர்களை கூட்டி, தனது முடிவை அறிவித்துவிட்டார். இதனால் உலக சுகாதார நிலையத்திற்கு கிடைத்துவந்த பெரும் தொகைப் பணத்திற்கு தற்போது துண்டு விழுந்துள்ளது.
இன் நிலையில் அதன் தலைவரை அகற்றுவதும். வேறு ஒரு தலைவரை கொண்டுவருவதுமே அமெரிக்காவின் ரகசிய திட்டமாக இருக்கிறது என்று சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். தற்போது இதன் தலைவராக இருப்பவர் சீன சார்பு போக்குடையவர் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

No comments:

Powered by Blogger.