50,000 ஆயிரம் பிரிட்டன் நபர்களை போட்டு தள்ளுவார் போல: நிலமை என்ன தெரியுமா மக்களே ?
பிரித்தானியாவில் கொரோனாவை பரிசோதிக்கும் இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதனை 80 நாடுகளுக்கு விற்று £12 மில்லியன் பவுண்டுகளை லாபமாக அடைந்துள்ளது. ஆனால் அந்த பரிசோதனை இயந்திரத்தை ஏன் பிரித்தானியா வாங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? நேற்றைய தினம் சுகாதார அமைச்சின் செயலாளர், மட் ஹனொக் ஊடகவியலாளர் மத்தியில், தமது வீர தீர செயல்பற்றி பேசிக்கொண்டு இருக்கையில். குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், ஏன் நீங்கள் குறித்த கம்பெனியிடம் இருந்து கொரோனா பரிசோதனை இயந்திரத்தை வாங்கவில்லை, என்ற கேள்வியை எழுப்ப. எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அப்படியே விலகிச் சென்றுள்ளார் செயலாளர். (அவர் முகத்தில் குற்ற உணர்ச்சி தென்பட்டது.)
Source: D/M: Revealed: UK firm is selling coronavirus testing kits to EIGHTY countries because labs here ‘can’t cope’ – while NHS swabbing stations stand deserted in Britain
அதுபோக Wembleyல் உள்ள IKEA தளபாட நிலையத்தின் கார் பார்க்கை எடுத்து. அதனை பெரும் பரிசோதனை நிலையமாக மாற்றினார்கள். மேலும் chessington world of adventures இடத்தையும் எடுத்து பரிசோதனை கூடமாக மாற்றினார்கள். ஆனால் இந்த 2 இடத்திலும் தற்போது எந்த ஒரு பரிசோதனையும் இடம்பெறவில்லை. இங்கே வைத்து NHSல் வேலை செய்யும் அனைவரையும் பரிசோதிக்கப் போவதாக அரசு அறிவித்தது. ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக அங்கே பரிசோதனை செய்ய என போடப்பட்ட நபர்கள். காலையில் எழுந்து வேறு வேலை இல்லாமல் உடல் பயிற்ச்சி செய்கிறார்கள் பாருங்கள்.(புகைப்படம் இணைப்பு)
பிரிட்டனில் கொரோனா கோரத்தாண்டம் ஆடும் நிலையில். ஒரு பிரிட்டன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும் கொரோனா பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளுக்கு விற்கிறது என்றால். பிரித்தானிய அரசு எந்த அளவு செயல்படுகிறது என்பது தொடர்பாக நீங்களே அறிந்து கொள்ளலாம். குறித்த கம்பெனியிடம் கருவிகளை வாங்கி. உடனே பரிசோதனை நிலையங்களை போட்டு. பெருவாரியான மக்களையும், NHS ஊழியர்களையும் பரிசோதனை செய்து அவர்களை விடுவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் தமக்கு கொரோனா இருப்பது தெரியாமலே பலருக்கு அதனை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
குறித்த பிரிட்டன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கருவிகளை வாங்கி, பரிசோதனை நிலையங்கள் போட்டால். தாக்கு பிடிக்க முடியாது என்று அரசு கருதுவதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. எனவே இவர்கள் போற போக்கை பார்த்தால். 90% சதவிகிதமானவர்களுக்கு பரவட்டும். அதில் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்பது போல இருக்கிறார்கள்.
No comments: