டிக்டாக் மோகம்; கொரோனா பாதித்த நிலையிலும் வீடியோ வெளியிட்ட இளம்பெண்!
சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தனது சொந்த ஊரான அரியலூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிக்டாக் பிரியையான அவர் சிகிச்சை பெற்றபொழுது மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்களையும் சேர்த்து கொண்டு டிக்டாக் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.
இதனால் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாத அந்த இளம்பெண் மீண்டும் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
No comments: