வாய் திறந்த 6 பேரையும் சீனாவில் காணவில்லை: இதுவரை என்ன ஆனார்கள் தெரியவில்லை
கொரோனா வுகானில் பரவியவேளை, இந்த வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை இதுவரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 3 மருத்துவர்கள் 2 விஞ்ஞானிகள் மற்றும் ஒரு ஊடகவியலாளர் என்று 6 பேர் அடங்குகிறார்கள். இது போக வெளவால் பெண் என்று அழைக்கப்படும் வைரஸ் விஞ்ஞானி ஒருவரையும் காணவில்லை.
இத்தனை பேரின் வாயையும் அடைத்து அவர்களை தலைமறைவாக வைத்திருக்கிறது சீன அரசு. இவர்கள் தற்போது உயிரோடு தான் இருக்கிறார்களா தெரியவில்லை என்று குறித்த ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments: