இங்கிலாந்தில் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்; அரசாங்க ஆலோசகர்!
இங்கிலாதில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரமர் போரிஸ் ஜான்சன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலை இங்கிலாதில் கட்டுப்படுத்த முடியாததால், நாள் தோறும் நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 980-யை எட்டியுள்ளதால், இதன் மூலம் இங்கிலாந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958-யை தொட்டுள்ளது.
நேற்று 881 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு முந்தைய தினம் 938 பேர் கொரோனாவல் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 980-பேர் உயிரிழந்துள்ளதால், இங்கிலாந்து இன்னும் ஒரு மோசமான நாளை சந்திப்பதுடன், தினசரி இறப்புகளில் அதிகம் உயிரிழப்பை இன்று பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் இதே நிலை நீடித்தால் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்க ஆலோசகர் ரூபர்ட் ஷூட்
தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆலோசகரின் குறித்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அரசு, அதிகாரிகள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.வியாழனன்று பாஸ்போர்ட்டு அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடிய ரூபர்ட் ஷூட்இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரூபர்ட் ஷூட் கூறியதாவது:-
இனி நீங்கள் பயப்பட தேவை இல்லை, உங்கள் குடியிருப்புகளில் இனி பத்திரமாக இருக்கலாம் அல்லது பல்பொருள் அங்காடிகளில் உங்களை இனி காண நேரிடலாம். இதுவரை கொரோனாவுக்கு இலக்காகாத நம்மில் பலரும், அல்லது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்காகலாம்.
இனி இந்த தகவல்களை மூடி மறைப்பதில் பலனில்லை. ஆனால் அதை குறைக்கும் தீவிர பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நெறிமுறைகளை மீறிய இந்த கருத்து கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது என தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
No comments: