Header Ads

Header Ads

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை லண்டன் இப்படி தான் அடைபட்டு இருக்க வேண்டும்

பிரித்தானிய அரச அதிகாரிகள் நேற்று நடத்திய கூட்டத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அது என்னவென்றால், கொரோனா வைரசுக்கான தடுப்பு ஊசிகள் பிரித்தானியாவுக்கு கிடைக்கும் வரை, பிரித்தானியாவில் பல இறுக்கமான சட்டங்கள் பேணப்பட வேண்டும் என்பது தான். இதில் முக்கியமான விடையம், லாக் டவுன். மக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என்பது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. நேற்றைய தினம், 980 பேர் பிரித்தானியாவில் இறந்ததை கேள்வியுள்ள பலர் அச்சத்தில் உறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இறந்தது, பிரித்தானிய அரசை மட்டும் அல்ல மக்களையும் பெரும் அதிர்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் நேற்றைய தினமே பலர் வெளியே செல்வதை நிறுத்திவிட்டதாக இன்றைய தினம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பிரித்தானியா அமெரிக்கா போல, படுகுழி நோக்கி நகர்ந்து வருகிறது என்று. அரச அதிகாரிகள் இணைந்து அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Powered by Blogger.