இறந்த மருத்துவரின் கடைசி வார்த்தைகள்: அப்பாவை பார்க்க என்னால் முடியாது என்ற மகள் ..
பிரித்தானியாவில் இதுவரை 9வெளிநாட்டு மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளார்கள். இதில் ஈழத் தமிழர் ஒருவரும் அடங்குகிறார். இன் நிலையில் 53 வயதாகும் (இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட) அப்த்துல் சவுத்திரி என்னும் மருத்துவர். முன்னணி களத்தில் நின்று வேலை செய்துள்ளார். தங்களிடம் சரியாக பாதுகாப்பு உபகரணங்களோ, உடைகளோ இல்லை. இதனை உடனே தருமாறு அவர் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கையும் விடுத்துள்ளார். ஆனாலும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன் நிலையில் அவருக்கும் கொரோனா தொற்றிவிட்டது. இதனால் அவர் இறக்கும் தறுவாயில் இருந்தவேளை, அவரை சந்திக்க அவரது 18 வயது மகனுக்கும், மனைவிக்கும் சந்தர்பம் கிடைத்தது.
அப்பா நான் ஏதாவது பிழைகள் விட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். சுகமாக சொர்கம் சென்று சேருங்கள். உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று மகன் கூறி கண்ணீர் வடித்துள்ளார். மனைவியும் கூடவே இருந்துள்ளார். ஆனால் அவர் பெரிதும் எதிர்பார்த்தது அவருடைய நண்பர் போல நெருங்கிப் பழகிய மகளை தான். ஆனால் மகள் வரவில்லை. அப்பாவை இப்படி ஒரு நிலையில் நான் பார்த்தால் நிச்சயம் மனம் உடைந்து விடுவேன். என்னால் தாங்க முடியாது, என்று கூறி மகள் வைத்தியசாலை செல்லவில்லை. ஆனால் அவளை தான் நான் ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன். அவள் மிகவும் துணிச்சலான பெண். இந்த கொடிய நோய் சீக்கிரம் அழிய வேண்டும் என்று கூறி அப்த்துல் சவுத்திரி உயிரிழந்தார்.
லண்டனில் இறக்கும் ஒவ்வொரு கொரோனா நோயாளிகளின் பின்னால் எத்தனையோ சோகக் கதைகள் உள்ளது. இவை அனைத்தும் ஆறாத ரணங்களாக பலர் மத்தியில் உள்ளது. தமது உயிரை துச்சமாக மதித்து லண்டனில் உள்ள அனைவருக்கும் சேவை செய்த இவர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டு மருத்துவர்களும் நிஜ ஹீரோக்கள் தான். அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
No comments: