பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நலம் தேறி வருகிறார்
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நலம் தேறி வருவதாக பிரதமர் அலுவகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால் அவரின் உடல்நலத்தில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இப்போது அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த விதமான மருந்தையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது
No comments: