அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம் இதனை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்காவில் தாம் பரிசோதனை நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு மருந்தை. அவர் பொறிஸ் ஜோன்சனின் மருத்துவருக்கு உடனே கொடுக்குமாறு அமெரிக்க மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Surce: D/M UK: Donald Trump claims he has asked US medical companies to offer experimental drugs to Boris Johnson’s doctors as he says says all Americans are praying for PM
இன்னும் சில மணி நேரங்களில் குறித்த மருந்து, லண்டன் வந்து சேர்ந்து விடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா இதனை பரீட்சாத்த மருந்து என்று தான் கூறுகிறது. ஆனால் அதனை ஒரு நாட்டு பிரதமர் மீது எப்படி சோதிப்பது ? என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா. எனவே இது ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்ட மருந்தாக தான் இருக்கவேண்டும். இதனை உற்பத்தி செய்து பொது மக்களுக்கு கொடுக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும் இந்த மருந்தை நட்பின் அடிப்படையில் ரம் வழங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
No comments: