லண்டனில் ஊரடங்கில் உல்லாசம்: கொரோனா ஒரு புறம் இவர்கள் தொல்லை மறு புறம்
கொரோனா ஊரடங்கின் போது லண்டன் பூங்காவில் ஒரு ஜோடி பட்டப்பகலில் உல்லாசம் அனுபவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போய் கிடக்கிறது. அங்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த துயரம், இங்கிலாந்தை உலுக்கிக் கொண்டிருக்க, இன்னொரு புறம், எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் அரங்கேறி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘செயின்ட் ஜேம்ஸ்’ என்ற பெயரில் ஒரு பூங்கா உள்ளது. இங்கே நடந்த செயல் அனைவரையும் அருவருக்கச் செய்துள்ளது. உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை, பயன்படுத்தி ஒரு ஜோடி உல்லாசம் அனுபவித்த காட்சியை பார்த்த மக்கள் திடுக்கிட்டுப் போனார்கள். அட நடு பூங்காவிலா ? அதுவும் பட்டப் பகலிலா ? என்று.
இத்தனைக்கும் அப்போது அந்த வழியே பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். சைக்கிளிலும் வலம் வந்துள்ளனர். அவர்களும் இதைக்கண்டு கொள்ளவில்லை. உல்லாசத்தில் மூழ்கி இருந்த ஜோடியும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சுமார் 15 நிமிடம் வரை தங்களது காம லீலையை அவர்கள் தொடர்ந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
No comments: