இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !
இலங்கையில் உள்ள தமிழர்களே ஜாக்கிரதை, நீங்கள் வங்கி கணக்கில் போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இல்லையென்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு வரலாம் என்ற சில ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. காரணம் என்னவென்றால், இலங்கை அரச திறைசேரியில் பணம் இல்லை. நாட்டில் 55% சதவிகித வருமாணம் சுற்றுலாத்துறையில் இருந்து பெறப்படுகிறது. சுற்றுலா துறை தற்போது 100% விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது போக தெயிலை ஏற்றுமதி வெகுவாக பாதிப்படைந்துள்ள நிலையில். இன்னும் சில வாரங்களே இலங்கை அரசால் சமாளிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடம், கடன் தொகை ஒன்றை அவசரமாக கோரியுள்ளது. இது கிடைத்தால் கூட இலங்கை அரசால் சமாளிக்க முடியாத நிலை தோன்றும். எனவே இலங்கை மத்திய வங்கி தனியார் வங்கிகளின் வைப்பில் இருக்கும் பணத்தை தற்காலிகமாக கடன் அடிப்படையில் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. நாட்டில் நிலவும் அவசரகால சூழ் நிலையில் இதனை இலங்கை அரசு செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. எனவே 10 லட்சம் வங்கியில் போட்டு வைத்திருந்தால். 1 லட்சம் ரூபாவை தான் நீங்கள் ஆகக் கூடிய தொகையாக தற்காலிகமாக பெற முடியும் என்ற, கட்டளை சில வேளைகளில் பிறப்பிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் தனியார் வங்கிகளில் போட்ட பணத்திற்கு, சிலவேளைகளில் ஒரு காப்புறுதி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. தனியார் வங்கிகளில் காசு போட்டவர்கள் சற்று மன நிம்மதியோடு இருக்கலாம்.
இதேவேளை இலங்கை ரூபாயின் விலை பெரும் வீழ்ச்சி கண்டு. £1 பிரித்தானிய பவுண்டுக்கு 233/= ரூபாய் என்ற நிலை தோன்றியுள்ளது. எனவே வெளிநாட்டில் இருந்து ஊருக்கு காசு அனுப்ப, இதுவே ஏற்ற தருணம். ஆனால் காசை வங்கியில் போடுவது என்பது. தற்போதைய சூழ் நிலையில் ஆபத்தான விடையம் என எச்சரித்துள்ளார்கள், சில ஆய்வாளர்கள். எனவே மக்கள் உஷார்.
No comments: