அம்மா NHS இருந்து இறந்தார் அப்பா ICU வில்: மகள் தற்போது அனாதை ஆனார்
அம்மா நர்சாக இருந்து, கொரோனா தொற்றி இறந்து போனார். அப்பாவும் வைத்தியசாலையில் வேலை செய்து கடுமையான கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதனால் மகள் தனித்து அநாதை ஆக்கப்பட்டுள்ளார். லோக்கல் கவுன்சில் குறித்த சிறுமியை பாரம் எடுத்துள்ள நிலையில். நல்ல உள்ளம் கொண்ட ஒரு குடும்பம், தாம் குறித்த சிறுமையை தற்காலிகமாக பார்பதாக கூறி பொறுப்பு எடுத்திருக்கிறார்கள். பாருங்கள் இந்த சிறுமியின் நிலையை. வீட்டில் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்களாக இருந்தால், எப்படியான ஒரு ஆபத்தான சூழ் நிலைக்கு பிள்ளைகள் தற்போது தள்ளப்படுகிறார்கள் என்று.
கார்மினா என்னும் இந்த 14 வயது சிறுமி இன்று அனாதையாக நிற்கிறார். அப்பாவும் அம்மாவும் முன்னணி கள வேலைக்கு செல்வது குறித்து பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு பேருமே ஆபத்தான கொரோனா நோயாளிகளைப் பராமரிக்ச் சென்று, நோய் தொற்றினால். பிள்ளைகளின் நிலை என்ன என்பது தொடர்பாக அரசு, ஒரு முடிவை எடுப்பது நல்லது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவேண்டும்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள தந்தை மீண்டு வர அனைவரும் பிரார்த்திப்போமாக.
No comments: